Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 18 மே (ஹி.ச.)
கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 9 ஆம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதி களில், 102ல் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை பிடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூ. தலைமையிலான இடது ஜனநாய க முன்னணி கூட்டணி தோல்வியடைந்து, ஆட்சியை இழந்தது. காங்., கூட்டணி சார்பில் முதல்வராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
காங்., மூத்த தலைவர்களான வேணுகோபால், சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியதால், முடி வு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்., நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா,எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் கேரள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தீவிரமாக நடத்திய ஆலோசனைகளுக்கு பின், சதீஷனின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காங்., மூத்தத் தலைவர் சதீஷன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு இன்று பதவியேற்க உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் இன்று காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், வி.டி.சதீஷனுக்கு, கேரள கவர்னர் அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அவருடன், முழு அமைச்சரவையும் இன்று பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, கேரள கவர்னர் அர்லேக்கரை, நேற்று சந்தித்த சதீஷன், முழு அமைச்சரவை பட்டியலை அளித்தார்.
இதில், முதல்வருடன், காங்.,கைச் சேர்ந்த 12 பேர், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எட்டு பேர் என, 20 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P