Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.
பாலம் அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்ட நிலையில், அதில் இருந்து இறங்கிய முதியவர் ஒருவர் ஆற்றுப் பகுதியில் சென்றுள்ளார்.
இதனை கவனித்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணிக்காக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள், ரப்பர் படகுகள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட நபர், திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் தனியாக தங்கி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்துக்கு முன்பு அவர் வேளச்சேரி பகுதிக்கு சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மரணத்திற்கான பின்னணி குறித்து குடும்ப சூழல், தனிப்பட்ட காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அடையாறு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P