Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச)
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்தக் கூட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான பணிகள், கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இலாக்கா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் உடனடியாக துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ