Enter your Email Address to subscribe to our newsletters



சென்னை, 18 மே (ஹி.ச.)
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்பட விநியோகிப்பாளரான கே. ராஜன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில்,
தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமான திரு. கே. ராஜன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,திரைப்படத் துறையின் நலன், குறிப்பாக சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் குறித்து தொடர்ந்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர்.
பல தசாப்தங்களாக திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என்றும் தெரிவித்துள்ளார்.
கே. ராஜன் மறைவால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் திரைப்படத் துறையினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ