மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
புதுக்கோட்டை, 18 மே (ஹி.ச.) தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இடி மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவ
Electric shock


புதுக்கோட்டை, 18 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இடி மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா. கல்லூரி பயின்று வந்த நிலையில் மழைக்காக தென்னை மரத்தின் அடியே ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

வயல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்கு சென்ற சுகுணா திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அருகில் இருந்து தென்னை மரத்திற்கு அடியில் ஒதுங்கி உள்ளார்.

அப்பொழுது மின்னல் தாக்கி மயங்கி விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சுகுணா பரிதாபமாக உயிரிழந்தார்.

மழை மற்றும் இடி மின்னல் சமயங்களில் மரத்திற்கு அடியில் இருக்கக் கூடாது என்ற நிலையில் மரத்திற்கு அடியில் நின்ற கல்லூரி மாணவி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN