Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச.)
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் கடும் வெப்பநிலை காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய கல்வியாண்டை முன்னிட்டு பள்ளிகளில் சுத்தம் செய்தல், வகுப்பறைகள் பராமரிப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் முதல் நாளிலிருந்தே பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam