இலங்கைக்கு கடத்த முயன்ற 12 பெட்டி சிகரெட் பண்டல்கள் பறிமுதல்
ராமநாதபுரம், 18 மே (ஹி.ச) ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கல்நீரோடை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த 12 பெட்டி சிகரெட் பண்டல்களை Q பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு கிடைத
Cigarette


ராமநாதபுரம், 18 மே (ஹி.ச)

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கல்நீரோடை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த 12 பெட்டி சிகரெட் பண்டல்களை Q பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், Q பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவமணி தலைமையில் 3 தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பெட்டி சிகரெட் பண்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மறைந்து இருந்து கடத்தல் கும்பல் வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரம் கண்காணித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு யாரும் வராததால், கைப்பற்றப்பட்ட சிகரெட் பண்டல்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடலோர பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN