குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வாட்ஸ்அப் மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடக்கம்
சென்னை, 18 மே (ஹி.ச.) சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை (Birth Certificate) தங்களது மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலமாகவே எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அற
Scheme to obtain birth certificates via WhatsApp


சென்னை, 18 மே (ஹி.ச.)

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை (Birth Certificate) தங்களது மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலமாகவே எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மாநகராட்சியின் இந்த புதிய தானியங்கி வாட்ஸ்அப் சேவை (Automated WhatsApp Chatbot) மூலம் மிக எளிதாகச் சான்றிதழைப் பெறலாம்.

அதன்படி, பெற்றோர் தங்களது மொபைல் போனில் 94450 61913 என்ற சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ்அப் உதவி மைய எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும்.

அந்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் 'Hi' அல்லது 'Birth Certificate' எனத் தகவல் அனுப்பித் தங்களது கோரிக்கையைப் பதிவு செய்ய வேண்டும்.

பெற்றோர் தங்களது விவரங்களை உள்ளிட்ட சில நொடிகளிலேயே, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு பிடிஎஃப் (PDF) வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இதனைப் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b