Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மே (ஹி.ச)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, 9 பேர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான துறைகளும் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தவர்கள் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கினார்
ஆதவ் அர்ஜூனாவை தொடர்ந்து, நிதி அமைச்சராக செங்கோட்டையனும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
செங்கோட்டையன் பொறுப்பேற்றுக்கொண்ட போது முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் புஸ்சி ஆனந்த் ஊரக வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அமைச்சர் ஆனந்தை இருக்கையில் அமரவைத்தார்.
சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், உணவுத்துறை அமைச்சராக வெங்கட் ரமணன், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல் குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன், கனிம வளத்துறை அமைச்சராக டி.கே.பிரபு, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா ஆகியோர் இன்று அவரவர் அறைகளில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை மேற்கொண்டனர்.
பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல, முதல்வரின் தனிச் செயலாளர்களான செந்தில் குமார், லட்சுமிபிரியா, அண்ணாதுரை ஆகியோர் கவனிக்கும் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் குமார் - நிதி, உள்துறை, மதுவிலக்கு, கலால், பொது, மறுவாழ்வு, நகராட்சி
நிர்வாகம், குடிநீர் வினியோகம், எரிசக்தி, தொழில், முதலீட்டு மேம்பாடு, வணிகத்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், சுகாதாரம், குடும்ப நலம், பொதுப்பணித்துறை. விஜிலன்ஸ் கமிஷன்
லட்சுமி பிரியா- முதல்வர் அலுவலக நிர்வாகம், முதல்வரின் சந்திப்புகள், சுற்றுப்பயணம், சுற்றுச்சூழல், வனம், கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி, சமூக நலம், பிற்பட்டோர், ஆதிதிராவிடர் நலம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு
அண்ணாதுரை - இயற்கை வளம், நீர் வளம், வேளாண்மை, விவசாயிகள் நலம்,
கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், கூட்டுறவு, உணவு, சமூக சீர்திருத்தம், கைத்தறி, ஜவுளி, காதி, போக்குவரத்து, சட்டம், சட்டசபை, மனித வள மேம்பாடு, தமிழ் வளர்ச்சி
கூடுதல் செயலாளர் விஷ்ணு - வணிக வரி, பதிவுத்துறை, சுற்றுலா, கலாசாரம், சிறு,
குறு, நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், இளைஞர் நலம், விளையாட்டு, தொழிலாளர் நலம், திட்டம், சிறப்புத்திட்ட அமலாக்கம், ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b