Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்கானூரணியில், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இதில் நடிகர் கமல்காசன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூஜைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்,
சேயோன் படம் இன்று சிறப்பாக தொடங்கியுள்ளது.
அதற்கான உழைப்பை கொடுக்க அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
படத்தின் கதைக்களம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
மதுரைக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
நம்ம ஊர் தொடர்பான கதையில் பணியாற்றுவது இன்னும் சிறப்பு. மதுரைக்கு ஒரு தனி பவர் இருக்கிறது. அந்த உணர்வு குறையாமல் படம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், படம் விருமாண்டி போன்றதாக இருக்குமா என்ற கேள்விக்கு,
விருமாண்டி மாதிரி எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் இருந்தது போல அனைவருக்கும் பிடிக்கும் கதையாக இருக்கும் என்றார்.
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றது குறித்து கேட்கப்பட்டபோது,
எங்களுடைய துறையில் இருந்து ஒருவர் முதல்வராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. அவர் வெற்றி பெற்ற பிறகு நான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.
அவர் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார்.
அதேபோல் ஆட்சியும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam