முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 18 மே (ஹி.ச) முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஈழத்தில் நடந்தது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை என்ற
Ramadoss


Jh


சென்னை, 18 மே (ஹி.ச)

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈழத்தில் நடந்தது சாதாரண உள்நாட்டுப் போர் அல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் பன்னாட்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், மக்கள் எடுக்கும் முடிவை சர்வதேச சமூகம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனித் தமிழீழமே ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கும் வாழ்வுரிமைக்கும் ஒரே தீர்வு என்றும், இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்து பன்னாட்டு விசாரணைக்கும் பொது வாக்கெடுப்பிற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளையும் நிலத்தையும் மீட்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சி உலகத் தமிழர்களோடு தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ