மூன்று நாள் தொடர் சோதனையில் 1700 கிலோ கஞ்சா பறிமுதல் பறிமுதல் - தர்மபுரி மாவட்ட காவல்துறை தகவல்
தர்மபுரி, 19 மே (ஹி.ச.) தர்மபுரி மாவட்டத்தில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் நடக்கும் மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மே
1,102 Liquor Bottles Seized


தர்மபுரி, 19 மே (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டத்தில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கள்ளச்சந்தையில் நடக்கும் மது விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில், காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் கடந்த, 3 நாளில் தீவிர சோதனை மேற்கொள்ளபட்டது.

இதில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த, 27 பேர் மீது, 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, 1,102 மது பாட்டில்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி, மகேஷ்வரன் அறிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த, 6 நபர்கள் மீது, 4 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடமிருந்து, 1700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து கள்ளச்சந்தை மது விற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி, மகேஷ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b