Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடு தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு புறம் எடப்பாடி பழனிசாமி அணியும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்நிலையில், இரு அணிகளும் ஒருவரை ஒருவர் கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும், பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியில் தங்கள் தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும், அதற்காக தேவையான உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டுள்ளதாகவும் வேலுமணி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை அவரது பசுமைவழிச்சாலை இல்லத்தில் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P