சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப் பொருள் தடுப்பு தனிப்படைகள் அமைப்பு
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னை வடக்கு மண்டலத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் 3 தனிப்பட்ட போதைப் பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய தனிப்படைகள் பூக்கடை
Police


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னை வடக்கு மண்டலத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் 3 தனிப்பட்ட போதைப் பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய தனிப்படைகள் பூக்கடை, வண்ணாரப்பேட்டை மற்றும் புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படவுள்ளது.

மேலும், இந்த மூன்று தனிப்படைகளின் ஒட்டுமொத்த பணிகளையும் உதவி ஆணையர் தலைமையில் ஒருங்கிணைத்து வடக்கு மண்டலத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த தனிப்படைகள் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ