Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி, மாவட்ட நீதிபதிகள் முருகன் மற்றும் திருமகள் சந்திரசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல், மாவட்ட நீதிபதிகள் சுமதி, தர்மலிங்கம், லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் மற்றும் குணசேகரன் ஆகியோரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ