மே 23 ஆம் தேதி தி.மு.க. இளைஞர் அணி கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 19 மே (ஹி.ச.) தி.மு.க. இளைஞர் மற்றும் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மே 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் க
DMK Youth Wing Meeting on May 23


சென்னை, 19 மே (ஹி.ச.)

தி.மு.க. இளைஞர் மற்றும் மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மே 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கழக இளைஞர் அணியின் மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், வருகிற 23.05.2026 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் துணைச் செயலாளர்கள் முன்னிலையில், கழகத் தலைவர் அவர்களின் சிறப்புரையுடன் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொருள் : ஜூன் 3, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள்

கழக இளைஞர் அணி ஆக்கப் பணிகள்

அன்பகம் தேனாம்பேட்டை சென்னை - 18 : 18-05-2026

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b