Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 19 மே (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மணிமங்கலம் அருகே அம்மணம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 5 பேரையும், இரண்டு சிறார்களையும் தமிழ்நாடு காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர் லோகேஷ் வீட்டில் இருந்த பாரத் மற்றும் சீனு ஆகிய இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த மணி என்கிற ஐயப்பன் (26), படப்பை சேர்ந்த சந்தோஷ் (23), முடிச்சூர் சேர்ந்த குமரவேல் (20), பெருங்களத்தூர் சேர்ந்த வேலன் (19), பீர்க்கங்கரணை சேர்ந்த அன்பு (20) உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறார்களையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கான பின்னணி மற்றும் முன்விரோதம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam