Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
ஓராண்டுக்கு தங்க நகைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், மத்திய நிதியமைச்சகம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் பிரதிபலிப்பாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்தும் வந்தது. கடைசியாக கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.5000க்கும் மேல் உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதை தொடர்ந்து கடந்த மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அதே விலையே 3 நாட்கள் நீடித்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,870க்கும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P