Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 19 மே (ஹி.ச.)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.
இதனால் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறியதாவது:
இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை நாங்கள் போட்டியில் இருந்தோம். 180 ரன்கள் என்பது சாதாரண ஸ்கோர் தான். கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையில், ஒரு விக்கெட் இழந்த பிறகு அதை செய்ய முடியவில்லை.
நாங்கள் அணியை கட்டமைத்து வருகிறோம். சஞ்சுவின் வருகை நல்ல அறிகுறி.
அவர் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். கார்த்திக் ஷர்மாவும் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
உலகம் முழுவதும் உள்ள சென்னை ரசிகர்கள் எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
சொந்த மைதானத்தில் சில போட்டிகளில் தோல்வி அடைந்தோம். இருந்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு இன்னும் வலிமையான அணியாக திரும்புவோம் என்றார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA