Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 மே (ஹி.ச..)
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர மருந்து சேவையை பாதிக்காமல் இருக்க தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள இந்த கடையடைப்பு போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அவசர மருந்து சேவையை கண்காணிக்க உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு அவசர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு சேவையை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகர் சங்கங்கள் அவசர மருத்துவ சேவைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அவசர தேவைக்கான மருந்துகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் மாவட்ட மருந்து ஆய்வாளர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam