தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை - ரூ.20 கோடி பண பரிவர்த்தனை கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 19 மே (ஹி.ச.) பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17-ஆம் தேதி காரில் அடையாறு திருவிக மேம்பாலம் வந்த கே.ராஜன், பின்னர்
Kr


சென்னை, 19 மே (ஹி.ச.)

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17-ஆம் தேதி காரில் அடையாறு திருவிக மேம்பாலம் வந்த கே.ராஜன், பின்னர் நடைபயிற்சிக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில், அடையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் குற்றச்சாட்டுப்படி, சில தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வரை பணம் கொடுத்து கே.ராஜன் ஏமாந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாருக்கு யார் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை கே.ராஜன் தனியாக டைரியில் எழுதி வைத்திருந்ததாக குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அந்த டைரியை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இது

அதேபோல், கே.ராஜனின் செல்போனும் போலீசாரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவர் தொடர்பில் இருந்தவர்கள், பண பரிவர்த்தனைகள் மற்றும் கடன் தொடர்பான விவரங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சில தயாரிப்பாளர்களுக்காக மற்றவர்களிடம் இருந்து கடனாக பணம் வாங்கி கொடுத்து, அதற்கு கே.ராஜன் உத்தரவாதம் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், கே.ராஜனை யாராவது தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரிலும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ