Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 19 மே (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை தகவலின்படி, மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு நபர்கள் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தப்பியோடி தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள நபரை உடனடியாக கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மழையூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள நபரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam