லிவ்யா அட்வான்ஸ்டு மெட்டபாலிக் ரீசெட்’ 90 நாள் திட்டம் தொடக்கம்
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னையில் உள்ள ‘லிவ்யா கியூர் ஹப்’ மருத்துவ மையமும், ‘டீம் ஹை பெர்ஃபார்மன்ஸ்’ (டிஹெச்பி ) உடற்பயிற்சி நிறுவனமும் இணைந்து ‘லிவ்யா அட்வான்ஸ்டு மெட்டபாலிக் ரீசெட்’ என்ற 90 நாள் ஆரோக்கிய மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளன. மருத
T


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னையில் உள்ள ‘லிவ்யா கியூர் ஹப்’ மருத்துவ மையமும், ‘டீம் ஹை பெர்ஃபார்மன்ஸ்’ (டிஹெச்பி ) உடற்பயிற்சி நிறுவனமும் இணைந்து ‘லிவ்யா அட்வான்ஸ்டு மெட்டபாலிக் ரீசெட்’ என்ற 90 நாள் ஆரோக்கிய மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளன.

மருத்துவமனையும் உடற்பயிற்சி நிறுவனமும் இணைந்து இப்படிப்பட்ட திட்டத்தை அறிமுகப்படுத்துவது சென்னையில் முதல் முறையாகும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, உடல் ஆற்றலை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் கட்டுப்படுத்துவதையே இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தில் அதிநவீன உடல் பரிசோதனைகள், தனிநபர் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற அறிமுக விழாவில் முன்னணி மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அறிமுக விழாவில் டாக்டர் வி. ஸ்ரவந்தி, டாக்டர் ஆஷாலதா ஸ்ரீனிவாசன், லிவ்யா கியூர் ஹப் நிர்வாக இயக்குனர் வி.கே.டி. ராஜு மற்றும் டீம் ஹை பெர்ஃபார்மன்ஸ் நிறுவனர் ஹரி பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

லிவ்யா கியூர் ஹப் என்பது தனிப்பயனாக்கப்பட்ட நல்வாழ்வு சேவைகளை வழங்கும் மையமாகும்.

இருதய நோய், நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி துறைகளில் நிபுணர்கள் இணைந்து சேவையளிக்கின்றனர். நோய் வருவதற்கு முன் தடுக்கும் முன்கூட்டிய பராமரிப்பில் இம்மையம் கவனம் செலுத்துகிறது.

2017 முதல் செயல்பட்டு வரும் டீம் ஹை பெர்ஃபார்மன்ஸ் நிறுவனம், தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சி சேவைகளை வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வழங்கி வருகிறது. சர்வதேச தரச்சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிப்பது இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய லிவ்யா கியூர் ஹப் நிர்வாக இயக்குனர் வி.கே.டி. ராஜு, “முன்கூட்டிய தடுப்பு, மீளுருவாக்கம் மற்றும் நிலையான ஆரோக்கிய மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.

டீம் ஹை பெர்ஃபார்மன்ஸ் நிறுவனர் ஹரி பிரசாத் கூறுகையில்,

அறிவியல் அடிப்படையிலான உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அணுகுமுறையை இணைத்து, மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தை வழங்க இந்த திட்டம் உதவும் என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA