மௌனிகா அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்-மஞ்சு மனோஜ் அறிவிப்பு
ஹைதராபாத் , 19 மே (ஹி.ச.) டோலிவுட் நடிகர் மஞ்சு மனோஜ் தனது மனைவி பூமா மௌனிகா ரெட்டி அரசியலில் அறிமுகமாக உள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் மௌனிகா போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார். நாளை (மே 20) தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செய்தியாளர்
T


ஹைதராபாத் , 19 மே (ஹி.ச.)

டோலிவுட் நடிகர் மஞ்சு மனோஜ் தனது மனைவி பூமா மௌனிகா ரெட்டி அரசியலில் அறிமுகமாக உள்ளதாக தெரிவித்தார்.

வரும் தேர்தலில் மௌனிகா போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

நாளை (மே 20) தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த மனோஜ், “தற்போது நாங்களும் அரசியலில் ஒரு பகுதியாக உள்ளோம் என்று விளக்கமளித்தார்.

அவர் சமீபத்தில் தொடங்கிய ( ஐக்யா தைரிய சேனா சமிதி ) அமைப்பு குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

இந்த அமைப்பு அரசியல் சார்ந்தது அல்ல. மக்களின் குரலாக செயல்படவே இதை தொடங்கினோம் என்று அவர் கூறினார்.

மேலும், ‘ஐக்யா’ அமைப்பின் சேவை நடவடிக்கைகளுக்காக தனது சொந்த நிதிகளை பயன்படுத்துவதாகவும், அந்த அமைப்புக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், தனது தந்தை மோகன் பாபு உடனான கருத்து வேறுபாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

அந்த கேள்வியை யாரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். மைக் கொண்டு செல்ல வேண்டாம்;

சென்றாலும் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA