அகில இந்திய கூடைப்பந்து போட்டி -சென்னை உள்பட 4 அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி
தேனி, 19 மே (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 65-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டங்களின் முடிவில் சென்னை இந்தியன் வங
Theni Sports


தேனி, 19 மே (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 65-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டங்களின் முடிவில் சென்னை இந்தியன் வங்கி உட்பட 4 அணிகள் லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி, நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும் - பெங்களூரு கஸ்டம்ஸ் ஜி.எஸ்.டி அணிகளும் பலப் பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை இந்தியன் வங்கி அணி 78-66 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு கஸ்டம்ஸ் ஜி. எஸ். டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னை விளையாட்டு விடுதி அணியும், புதுடெல்லி இந்திய ராணுவ அணியும் பலப் பரீட்சை நடத்தின. இரு அணிகளும் தொடக்கம் முதலே புள்ளிகளை கைப்பற்ற ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இறுதியில் சென்னை விளையாட்டு விடுதி அணி 87 - 79 என்ற புள்ளிகளில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

மேற்கொண்டு நடைபெற்ற ஆட்டங்களில் புது டெல்லி இந்திய விமானப்படை அணி 84-62 என்ற புள்ளிகளில் திருவனந்தபுரம் கேரளா காவல் துறை அணியையும், புதுடெல்லி ஓ. என். ஜி. சி அணி 98-80 என்ற புள்ளிக் கணக்கில் லோனாவாலா இந்திய கப்பற்படை அணியையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தினர்.

இதன் மூலம், சென்னை இந்தியன் வங்கி, சென்னை விளையாட்டு விடுதி, இந்திய விமானப்படை மற்றும் புதுடெல்லி ஓ.என்.ஜி.சி ஆகிய நான்கு அணிகளும் லீக் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன.

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் இந்த போட்டிகளை கண்டுகளித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN