Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 மே (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டத்தில் ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை நிறுத்தி ரூ.200 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உதவி ஆய்வாளர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பூர் மாநகர் நல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் மோகன், காங்கேயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆடு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
அதில் வாகனத்திற்கான புகை சான்றிதழ் (Pollution Certificate) இல்லை என கூறி, விவசாயியிடம் ரூ.200 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை ஆடு வியாபாரிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam