Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து போக்குவரத்து கழகம் மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓட்டுநர்கள் சட்டைப்பையில் கைபேசி வைத்திருப்பதுடன், பணிநேரத்தில் அவ்வப்போது பயன்படுத்தி வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு மற்றும் பெரிய விபத்துகள் ஏற்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஓட்டுநர்கள் பணியின் போது கைபேசியை சட்டைப்பையில் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தட ஆய்வுகளின் போது ஓட்டுநர்கள் கைபேசி வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள்மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P