விருகம்பாக்கத்தில் காரின் மீது மரக்கிளை விழுந்து விபத்து - பெண் காயம்
சென்னை, 19 மே (ஹி.ச.) சென்னை விருகம்பாக்கம் குமரன் நகர் மெயின் ரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென மரக்கிளை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கணவன்-மனைவி இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சாலையோர மரத்தில் இருந்து பெர
Car


சென்னை, 19 மே (ஹி.ச.)

சென்னை விருகம்பாக்கம் குமரன் நகர் மெயின் ரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென மரக்கிளை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவன்-மனைவி இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சாலையோர மரத்தில் இருந்து பெரிய கிளை ஒன்று எதிர்பாராத விதமாக உடைந்து காரின் மீது விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, சாலையில் விழுந்த மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ