Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 மே (ஹி.ச.)
மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகா வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளையும் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P