Enter your Email Address to subscribe to our newsletters

புனே , 02 மே (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் 65 வயதுடைய முதியவர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் காணாமல் போன 4 வயது சிறுமியை உறவினர்கள் பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தனர்.
விசாரணையில், முதியவர் ஒருவர் சிறுமிக்கு உணவு தருவதாக ஆசை காட்டி ஏமாற்றி அழைத்துச் சென்றது தெரியவந்தது.
சிறுமியைத் தேடிய உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் முதியவரிடம் விசாரித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான மாட்டுக் கொட்டகைக்கு அழைத்துச் சென்ற அந்த முதியவர் அங்கு பாலியல் வன்கொடுமை செய்து அச்சிறுமியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
அதன்பின் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முதியவர் சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.
குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b