Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 90,18,069 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து,மெட்ரோ இரயில் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி,
அதிகபட்சமாக 02.04.2026 அன்று 3,65,807 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2026, ஏப்ரல் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 45,18,247 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 25,659 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 44,74,163 பயணிகள் (Single journey Paper QR /Token 17,83,530; Online QR – 1,23,723; Static QR 1,89,993; Whatsapp - 4,20,792; Paytm 2,82,290; ONDC – 11,48,235; PhonePe – 2,39,157; CMRL Mobile App 61,393; Chennai One App – 1,84,785, Event QR – 40,265) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.
மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப் பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.
மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றி
என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b