Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 02 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், குளிர்ச்சியை நாடி ஏராளமான சுற்றுலா பயணிகள் அகத்தியர் அருவிக்கு திரண்டுள்ளனர்.
விடுமுறை நாளையொட்டி குடும்பத்தினருடன் வந்தோர் அதிகரித்ததால், அருவி பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது போல பரபரப்பாக காணப்பட்டது.
அகத்தியர் அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நேரத்தை கழித்தனர்.
ஆனால், பயணிகள் வருகை அதிகரித்ததால் அகத்தியர் அருவிக்கு செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றினர்.
இருப்பினும், வாகன நெரிசலால் பலர் சிரமத்தை சந்தித்தனர்.
கோடை வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற அகத்தியர் அருவியை நாடிய மக்களின் வருகை, அந்தப் பகுதியை விழாக்கோலமாக மாற்றியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam