இந்தியாவில் வணிக எரிவாயு விலை உயர்வு - பா.ஜ.க விளக்கம்
சென்னை, 02 மே (ஹி.ச.) இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்த நாராயணன் திருப்பதி, உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது இந்த
Narayanan


Jj


சென்னை, 02 மே (ஹி.ச.)

இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதற்கு பதிலளித்த நாராயணன் திருப்பதி, உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு விலை குறைவாகவே உள்ளதாக தெரிவித்தார்.

ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றத்தையடுத்து உலகளவில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.900–940 வரை விற்கப்படுகின்றது.

பிரதம மந்திரி உஜ்ஜ்வலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.500–600 வரை சலுகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வீட்டு எரிவாயு விலை அதிகமாக உள்ளதாகவும், சில நாடுகளில் தட்டுப்பாடும் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் 33 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது உலகளவில் அதிகமான இணைப்புகளைக் கொண்ட நாடாக இந்தியாவை மாற்றியுள்ளதாகவும் விளக்கினார்.

இதனிடையே, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு விலை ரூ.3000–3300 வரை உயர்ந்துள்ளது. இதுவே பொதுமக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், தட்டுப்பாடு இல்லாமல் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக தரப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வணிக எரிவாயு விலை உயர்வை அரசியல் நோக்கில் தவறாக விளக்கப்படுவதாகவும் பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ