சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தஞ்சாவூர், 02 மே (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த விழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Chariot Festival at the Swamimalai


தஞ்சாவூர், 02 மே (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு இந்த விழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா முதல் மே 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்.25-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்கள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

பிரதான விழாவான இன்று

(மே 2-ம் தேதி) திருத்தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக காலை 7:00 மணி அளவில் சுவாமிகள் படிச்சட்டத்தில் விசாக நட்சத்திரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதில் தக்கார் சுவாமிநாதன், அறநிலையத்துறை துணை ஆணையர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை (மே 3-ம் தேதி) சபாபதி பாகுலேய சுப்பிரமணியர் (நடராஜர் பெருமான்) சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் தேர்தல் பார்த்தல் திருவீதி வைபவம் ஊடல், மே 4- ம் தேதி சுவாமி யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b