வனவிலங்குகளின் நடமாட்டத்தால் இரவு நேர பயணங்களை தவிர்க்க வனத்துறையினர் எச்சரிக்கை
கோவை, 02 மே (ஹி.ச.) கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தாங்காமல் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி சாலைகளில் உலா வருவது தற்போது வ
Forest Office


கோவை, 02 மே (ஹி.ச.)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தாங்காமல் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி சாலைகளில் உலா வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா பயணி ஒருவர் வாகனத்தில் சென்றபோது காடம்பாறை செல்லும் ஆர்ச் அருகே 19.வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையில் ஒய்யாரமாக நீண்ட தூரம் ஜாலியாக நடந்து சென்றதைக் கண்டு மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் அடைந்தார்.

மேலும் சிறுத்தை வாகனம் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் நீண்ட தூரம் வாகனத்துக்கு முன்பாகவே நடந்து சென்றதைக் கண்டு வாகனத்தில் சென்றவர்கள் ஆச்சரியப்படுத்தியதுடன் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானை சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் தற்போது கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவு நேர பயணங்களை வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள வன சாலையில் தவிர்க்க வேண்டும் எனவும் மிகுந்த பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN