கோவை ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
கோவை, 02 மே (ஹி.ச) கோவை ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த இரண்டு பார்சல் மூட்டைகளை கவனித்தனர். அவற்றில் எந்தவித முகவரியும் இல்லாமல், “சிவன்” என்ற பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத
Hh


கோவை, 02 மே (ஹி.ச)

கோவை ரயில் நிலையத்தில்

ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசார், சந்தேகத்துக்கிடமாக இருந்த இரண்டு பார்சல் மூட்டைகளை கவனித்தனர்.

அவற்றில் எந்தவித முகவரியும் இல்லாமல், “சிவன்” என்ற பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, போலீசார் பார்சல்களை திறந்து சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கேட்பாரற்ற நிலையில் இருந்த பொருட்கள் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த பொருட்களை யார் அனுப்பினர், எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ