விஜய்க்காக உயிரையும் தியாகம் செய்வதற்கு தேர்தலை போட்டியிட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள் - செங்கோட்டையன்
ஈரோடு, 02 மே (ஹி.ச.) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக வெற்றிக
Sengottaiyan


ஈரோடு, 02 மே (ஹி.ச.)

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழக வெற்றிக் கழகம் பொருத்தவரை தியாகத்தால் உருவாக்கப்பட்டிருக்க இயக்கம். மனிதநேயத்துடன் இயங்கும் இயக்கம். தொலைநோக்கு சிந்தனை உடன் மக்களுக்கு பணியாற்றக்கூடிய மனிதநேயமிக்க தலைவர் விஜய்.

2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய ஒரு வரலாறாக அமைய, இந்தியாவை இயக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழும் காலமாக அமையும். பல்வேறு சோதனைகளை கடந்து சாதனைகள் படைப்பதற்காக, இரவு பகல் பாராமல் எதிர்ப்புகளை தாண்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

காலம் 4ம் தேதி பதில் சொல்லும். சரித்திர வரலாற்றில் இந்தியாவில் முதல் இடத்தை பெறப்போகிற தலைவராக விஜய் இருப்பார்.

கருத்துக் கணிப்பு என்பது, மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் கேட்காமல் விசில் சின்னத்திற்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள்.

முதல் வாக்கு அளிக்கக்கூடிய அனைவரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை சிறந்த தலைவர் கிடைத்திருக்கிறார் என்ற எண்ணங்கள் மக்கள் மத்தியில் இருப்பதால், நான்காம் தேதி இது பிரதிபலிக்கும்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்ற கருத்துக்கு,

நயினார் நாகேந்திரன் பொருத்தவரை இதுதான் இறுதித் தேர்தல்.

இதற்கு மேல் கட்சிப் பதவி இருக்குமா இருக்காதா என்று கட்சி மேலிடம் சொல்லும்.

இளையராஜா பாடலுக்கு வெளியீட்டுக்கு,

எல்லோரும் மனம் திறந்து விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தோடு, இளையராஜா இசை வெளியிட்டு இருக்கிறார்.

இது மக்களின் பிரதிபலிப்பாக அவர் வெளியிட்டிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் பட்டியல் வெளியிட்டது தொடர்பாக செய்தியாளர் கேள்விக்கு,

unofficial ஆக வெளியிட்டதற்கு கேள்வி கேட்கக்கூடாது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பனையூர் வரவேண்டும் என்பது விஜய்யின்ன் அறிக்கை என்பது அனைத்து கட்சிகளும் சொல்லக் கூடிய வழக்கமான ஒன்றுதான்.

விஜய்க்காக உயிரையும் தியாகம் செய்வதற்கு தேர்தலை போட்டியிட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

வைகோ உண்மையில் மனம் திறந்து பேசி இருக்கிறார் அதற்கு அவருக்கு பாராட்டு. 150 முதல் 200 தொகுதி வரை தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்.

அதுதான் இலக்காகவும் மக்களின் மனநிலையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN