Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
கடந்த மார்ச் மாதம் போர் காரணமாக தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு பிறகு ஏற்ற இறக்கமாக இருந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதமும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வந்தது.
மே மாதம் முதல் நாளான நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலை, மாலை என 2 வேளையுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,11,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ரூ.13,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,000க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.112,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P