Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் எரிவாயு, மளிகைப் பொருட்கள் மற்றும் மரக்கட்டைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கும் விடுதிகளின் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில்,
சமீப காலமாக எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து, ஒரு சிலிண்டர் ரூ.6000 முதல் ரூ.7000 வரை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல விடுதிகள் மர அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மரக்கட்டைகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் மே 5ஆம் தேதி முதல் தங்கும் விடுதிகளின் கட்டணத்தை சுமார் 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய குறைந்தபட்ச கட்டண விவரங்கள் பின்வருமாறு,
- 4 பேர் தங்கும் வசதி: Non-AC ரூ.6500, AC ரூ.7500
- 3 பேர் தங்கும் வசதி: Non-AC ரூ.7000, AC ரூ.8000
- 2 பேர் தங்கும் வசதி: Non-AC ரூ.8000, AC ரூ.9000
இத்துடன், சில விடுதிகளில் வழங்கப்படும் வசதிகளைப் பொறுத்து கட்டணங்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரும் செலவுகளால் இந்த கட்டாயமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தொடர்ந்து சேவை வழங்க உதவுமாறு உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ