ஐபிஎல் - டெல்லி அபார பேட்டிங் - ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...!
ஜெய்ப்பூர் , 02 மே (ஹி.ச.) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்
D


ஜெய்ப்பூர் , 02 மே (ஹி.ச.)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் தொடக்கத்திலேயே அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், சூர்யவன்ஷி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து கேப்டன் ரியான் பராக் மற்றும் துரு ஜூரல் இணைந்து அணியை மீட்டனர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் வேகத்தை உயர்த்தினர். குறிப்பாக ரியான் பராக் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் பெரேரா அதிரடியாக விளையாடியதால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.

பின்னர் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமைந்தது.

கே எல் ராகுல் - பாத்ம் நிஷாகண்ணா ஜோடி ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது.

அதிரடியாக விளையாடிய நிசாங்கா 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ராகுல் அரைசதம் அடித்து 40 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து நித்திஷ் ரானா 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

பின்னர் ஸ்டப்ஸ் மற்றும் அஷுதோஷ் இணை அமைதியாக ஆட்டத்தை முடித்து வைத்தது.

இறுதியில் டெல்லி அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், பர்கர், தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA