Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய “ஜனநாயகன்” திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில், சென்னையின் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
தணிக்கை குழுவின் மறு ஆய்வில் இருந்த “ஜனநாயகன்” படம் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம், ரஜினி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் வழக்கின் தற்போதைய புலனாய்வு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
Hindusthan Samachar / P YUVARAJ