திருவிழாக்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை கோரி வழக்கு – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மதுரை, 02 மே (ஹி.ச.) திருவிழாக்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, திடக்கழிவுகள் காரணமாக ஏற்படும் சுகா
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 02 மே (ஹி.ச.)

திருவிழாக்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, திடக்கழிவுகள் காரணமாக ஏற்படும் சுகாதார பாதிப்பு அபாயம் குறித்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என கவலை தெரிவித்தார்.

திருவிழாக்கள் முடிந்த பின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவது பெரும் பிரச்சினையாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கோயில் திருவிழாக்களை நடத்தும் போது யாருக்கும் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கக்கூடாது என்றும், ஜாதி–மத பாகுபாடின்றி அனைவரும் இணைந்து விழாவை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

திருவிழா நடைபெறும் பகுதிகளில் தற்காலிக குப்பைத்தொட்டிகள் போதுமான அளவில் அமைக்க வேண்டும் என்றும், குப்பை மேலாண்மையை சரியான முறையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதேபோல், தமிழக அரசு தடை செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam