கான்பூர் ராக்கி மண்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கான்பூர், 02 மே (ஹி.ச) உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் ராக்கி மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படு
Massive Fire Accident at Kanpur's Rakhi Mandi Factory


கான்பூர், 02 மே (ஹி.ச)

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் ராக்கி மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் சர்மா கூறுகையில்,

ராக்கி மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கிடைத்தது.

தரை மற்றும் முதல் தளத்தில் பெரும் தீ பரவி, சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கும் பரவும் அபாயம் இருந்தது.

பகுதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 முதல் 7 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

எங்கள் குழு மூன்று திசைகளில் இருந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டது. முதன்மையான நோக்கம் அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதாகும்.

தீயை கிட்டத்தட்ட முழுமையாக அணைத்துவிட்டோம்.

யாருக்கும் காயம் இல்லை, உயிர்சேதமும் இல்லை. முழு நடவடிக்கையும் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 7 முதல் 8 வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b