Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 02 மே (ஹி.ச.)
தமிழகத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள்,
ஏலக்காய் ,மருந்து
பொருட்கள் ,கஞ்சா உள்ளிட்டவை நடத்திச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் சிலாபம் கடல் பகுதியில் இரண்டு படகுகள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கண்காணித்தனர்.
அப்போது இரண்டில் ஒரு படகு இந்திய படகு என்றும் மற்றொரு படகு இலங்கை படகு என்றும் இந்திய படகில் இருந்து மூடைகள் இலங்கை படகுக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்ததும் அப்போது தெரிய வந்தது.
இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையில் இந்திய படகிலிருந்து 80 மூடைகளில் 2000 கிலோ பீடி இலைகள் கடத்திச் செல்லப்பட்டு இலங்கை படகில் ஏற்றப்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பீடி இலை பண்டல்களையும் அதனை கடத்த பயன்படுத்திய இந்திய இலங்கை படகையும், இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 மூணு என ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN