மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கைக்கூலி - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
திருநெல்வேலி, 02 மே (ஹி.ச.) சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று (02/05/2026) செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அப்பாவு கூறியதாவது, ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் வழக்கு குறித்து செந்தில்பாலாஜி தெளிவான விளக்கம் சொல்ல
மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கைக்கூலி - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்


திருநெல்வேலி, 02 மே (ஹி.ச.)

சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று (02/05/2026) செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது அப்பாவு கூறியதாவது,

ட்ரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் வழக்கு குறித்து செந்தில்பாலாஜி தெளிவான விளக்கம் சொல்லி இருக்கிறார். 1987-ல் இருந்து என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதோ அதே நடைமுறையை தான் நாங்களும் கடைப்பிடித்திருக்கிறோம்.

எந்த தவறும் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

2011-ல் இருந்து 2021 வரை 10 ஆண்டு காலம் அதானி நிலக்கரியை கொள்முதல் செய்து கொடுத்தார்கள்.

அந்த நிலக்கரி கொள்முதலில் ஏழு எரிதிறன் உள்ள நிலக்கரியை விநியோகம் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டு நான்கரை எரிதிறன் கொண்ட தரம் குறைந்த நிலக்கரியை விநியோகம் பண்ணிருக்கிறார்கள்.

எந்த நாட்டிலிருந்து நிலக்கரி கொள்முதல் செய்கிறோமோ அந்த நாட்டிலிருந்து 'கண்ட்ரி ஆப் ஆர்ஜின் சர்டிபிகேட்' என்ற ஒன்றைக் கொடுப்பார்கள். அதில் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரியினுடைய தரம் எழுதி இருப்பார்கள். அந்த ஆர்ஜின் சர்டிபிகேட் இல்லாமல் பணம் கொடுக்கக் கூடாது.

ஆனால் அதிமுக ஆட்சி அதானி நிலக்கரி சப்ளையில் ஆர்ஜின் சர்டிபிகேட்டே இல்லாமல் ஒரு போலியான நிறுவனத்தை வைத்து தரமான நிலக்கரி என சர்டிபிகேட் கொடுத்து அதானி நிறுவனத்துடன் சேர்ந்து முழு ஊழல் செய்தது அதிமுக ஆட்சி. இதை நான் சொல்லவில்லை. சிஏஜி அறிக்கை சொல்கிறது. ரேண்டமாக பார்த்ததில் 826 கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அந்த சிஏஜி ரிப்போர்ட்டை வைத்து அமலாக்கத்துறையோ, சிபிஐயோ அல்லது ஏன் நீதிமன்றமோ தாமாக முன்வந்து அதை எடுத்து விசாரிக்கத் தயாரா? அவ்வளவுதான்.

பாரதிய ஜனதா கட்சியுடைய, பாரத பிரதமருடைய நண்பர் அதானி. தரம் குறைந்த நிலக்கரியை விநியோகம் செய்திருக்கிறார்.

கண்ட்ரி ஆப் ஆர்ஜின் சர்டிபிகேட் இல்லாமல் நிதி பெற்றுள்ளார். ஆனால் பிஎஸ் அப்துல் ரஹ்மானுடைய பையன் புஹாரியை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அதன்பிறகு அதானி ஆட்கள் அவரிடம் பேரம் பேசி அவருக்கு தூத்துக்குடி பக்கத்திலிருந்த இரண்டு 600 மெகாவாட் மின் நிலையத்தையும் அதானி குழுமத்துக்கு எழுதி வாங்கிவிட்டார்கள். அதன்பிறகு தான் ஜாமீனிலேயே விட்டுள்ளார்கள்.

அப்போது பாரத பிரதமரின் நெருங்கிய நண்பராக இருப்பதால் அதானிக்கு ஒரு நியாயம். பிஎஸ் அப்துல் ரஹ்மான் மகனுக்கு ஒரு நியாயமா? மோடியின் ஆட்சியில் இந்தியா அவமானப்படுத்தப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடைய கைக்கூலி மாதிரி இருக்கிறார். இதுதான் இங்கு வெட்கக்கேடானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b