Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 மே (ஹி.ச.)
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், பதாகைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் TVK ரமேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்திற்கான CCTV ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகள், திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ