Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 02 மே (ஹி.ச.)
யானம் ரீஜென்சி குழுமத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான டாக்டர் ஜி.என். நாயுடு உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழில்துறை பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோர் இன்று ஹைதராபாத்தில் உள்ள ஜி.என். நாயுடுவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஜி.என். நாயுடுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு,
டாக்டர் ஜி.என். நாயுடுவுடன் எனக்கு நீண்டநாள் நெருக்கமான உறவு இருந்தது.
ரீஜென்சி நிறுவனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர்.
தொழில்துறையில் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அவர் முன்னுதாரணமாக விளங்கினார்.
ஜி.என். நாயுடுவின் மறைவு தொழில்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது மறைவால் தெலுங்கு மக்கள் ஒரு சிறந்த தொழிலதிபரை இழந்துள்ளனர்,
என்று சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA