அம்மா போல ஆட்சி நடத்துவேன் என்றால் கேலி செய்தார்கள் - கவிதா உருக்கம்
ஹைதராபாத் , 02 மே (ஹி.ச.) தெலுங்கானா அரசியலில் புதிய அரசியல் சக்தியாக ‘தெலுங்கானா ரக்ஷண சேனா’ (டிஆர்எஸ்) கட்சியை முன்னாள் எம்.எல்.சி. கவிதா அறிமுகப்படுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள பஷீர்பாக் பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்ற ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச
T


ஹைதராபாத் , 02 மே (ஹி.ச.)

தெலுங்கானா அரசியலில் புதிய அரசியல் சக்தியாக ‘தெலுங்கானா ரக்ஷண சேனா’ (டிஆர்எஸ்) கட்சியை முன்னாள் எம்.எல்.சி. கவிதா அறிமுகப்படுத்தினார்.

ஹைதராபாத்தில் உள்ள பஷீர்பாக் பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்ற ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கவிதா,

மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்குவதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.

தற்போதைய அரசுகளுக்கு அம்மா போல சிந்திக்கும் மனம் இல்லை.

நான் அம்மா போல பரிணாமம் அடைந்து ஆட்சி நடத்துவேன் என்றால் பலர் கேலி செய்தார்கள்.

ஆனால், அம்மா போல அன்புடன் ஆட்சி செய்தால்தான் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் என்று உருக்கமாக தெரிவித்தார்.

சாதாரண மக்களின் வருமானத்தில் பெரும்பங்கு கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கே செல்கிறது என்று வேதனை தெரிவித்த அவர், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் முழுமையான இலவச கல்வி வழங்கப்படும்.

இதற்கான நிதி திட்டம் ஏற்கனவே தயாராக உள்ளது.

புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வந்தாலும் ஏழைகள் சிகிச்சை இன்றி உயிரிழக்க வேண்டிய நிலை இருக்காது.

எவ்வளவு செலவானாலும் அரசே ஏற்று, அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படும்.

கொள்முதல் மையங்களில் விவசாயிகள் அவதிப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

நெல் ஏற்றுமதிக்காக தனி குழு அமைத்து, விவசாயிகளுக்கு ஆதரவு விலையுடன் மரியாதையும் கிடைக்கச் செய்வோம்.

இளைஞர்கள் வேலை தேடி அலையாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்று அழைப்பு விடுத்த கவிதா, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு அவர்களின் யோசனைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட அவர், தலைமைச் செயலகம் போன்ற பெரிய கட்டிடங்களில்கூட சரியான ரேம்புகள் மற்றும் சிறப்பு கழிப்பறைகள் இல்லாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், ஆர்.டி.சி. பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண வசதி வழங்கப்படாததையும் கண்டித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA