Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 02 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் விவசாயத்தை நம்பியே ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலும் இரண்டு போகங்கள் நெல் சாகுபடி செய்வது வழக்கம்.
அதாவது, கார் சாகுபடி, பிசான சாகுபடி ஆகிய இரண்டு சாகுபடிகள் நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக பிசான சாகுபடி நிறைவு பெற்று பிறகு கோடை காலங்களில் மாற்று விவசாய முறையானது கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
அதாவது, வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளை விவசாயிகள் பயிரிட்டு லாபம் ஈட்டுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இன்னும் ஒரு மாத கால அளவில் குற்றால சீசன் ஆரம்பிக்க உள்ள நிலையில், சாரல் மழை பொழியும் என்பதால் தற்போது முதலே சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சின்ன வெங்காயம் சாகுபடி செய்தால் அதிக லாபம் கிடைப்பதாகவும், பெரிய வெங்காயம் சில நேரங்களில் விலையானது வீழ்ச்சியடைவதால் அதில் நஷ்டம் ஏற்படுவதாகவும், பெரும்பாலும் சின்ன வெங்காயம் தாங்கள் முதலீடு செய்த தொகையை எடுக்கும் அளவிற்கு விற்பனையாவதாகவும், இதுவரை சின்ன வெங்காயம் பயிரிட்டு தாங்கள் நஷ்டம் அடைந்ததில்லை என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது மகிழ்ச்சியுடன் இந்த சின்ன வெங்காய பயிரை பயிரிட்டு வருவதாகவும் கடவுள் ஆசியுடன் நல்ல மழை பெய்தால் விவசாயம் செழித்து நல்ல லாபம் ஈட்ட முடியும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / ANANDHAN