Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 02 மே (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டியான ஜெயலட்சுமி திருவொற்றியூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் சீசனுக்கு ஏற்றார் போல் பழம் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு குழந்தைகள் விளையாடும் டம்மி 500 ரூபாய் கொடுத்து 150 ரூபாய்க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி தொகை வாங்கி சென்றிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து சுதாரித்துக் கொண்ட அந்த மூதாட்டி அருகில் இருந்த வியாபாரிகளிடம் காண்பித்த போது இது டம்மி நோட்டு என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
தனது கணவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக மாத்திரை வாங்குவதற்காகவும் வியாபாரம் செய்து கொண்டு இருந்த நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த மூதாட்டி கண் கலங்கினார்.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் செய்தி வாயிலாகிலும் தொடர்ந்து வைரலாகி வந்தது.
இதனைத் தொடர்ந்து மூதாட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்களும் மற்றும் சின்னத்திரை நடிகர் பாலா போன்றோர்கள் பாட்டிக்கு பண உதவியும் பொருள் உதவியும் அளித்து வந்தனர்.
இது தொடர்பாக திருவெற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்து அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மூதாட்டியை ஏமாற்றிய பெண்ணை தேடி வந்தனர்.
அந்த விசாரணையில் எர்ணாவூர் பகுதியில் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் என தெரியவந்தது.
உடனடியாக அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் விசாரணையில் தான் எதார்த்தமாக இது போன்ற விஷயத்தில் செய்வதாக கூறிய நிலையில் காவல் நிலைய ஜாமினில் அந்த பெண்ணை எச்சரித்து இனியும் இதுபோன்று நடத்தக்கூடாது என்று அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வயதான பாட்டிக்கு சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் பொதுமக்களும் பண உதவி கொடுத்து பாட்டியிடம் வாழ்த்து பெற்று செல்கின்றனர்.
இதனிடையே மூதாட்டி காவல் நிலையத்தில் சென்று தன்னை ஏமாற்றிய அந்த பெண் தனது மகள் போல இருப்பதாகவும் அவரை மன்னித்து விட்டு விடுமாறும் போலீசாரிடம் கோரிக்கையை வைத்திருக்கிறார்.
Hindusthan Samachar / GOKILA arumugam